அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படம் ! இயக்குனர் யார் தெரியுமா ?

  • November 5, 2022 / 12:43 AM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அர்ஜுன் தாஸ் .இந்த படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது . அதன் பிறகு நடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’,படத்திலும் இவர் நடித்தார் . இவர் தற்போது வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் போன்ற வெற்றி படங்களை கொடுத்தத இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் ‘அநீதி’ படத்தில் நடித்து வருகிறார்.

‘அநீதி’ படத்தில் இவருக்கு ஜோடியாக சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.இதைத்தொடர்ந்து, அர்ஜுன் தாஸ், ‘மெளனகுரு’, ‘மகாமுனி’ போன்ற படங்களை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் இணைந்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கைதி படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது இதனால் நடிகர் அர்ஜுன் தாஸ் அவர்களுக்கு ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது . இதனால் இவரது படத்திற்கு தனி எதிர்பார்ப்பும் உள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus