நாடு முழுவதும் கொரானா வைரஸ் தாக்குதல் காரணமாக திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து சமீபத்தில் அரசு திரைப்பட படப்பிடிப்புகள் நடப்பதற்கு அனுமதி வழங்கியது. குறிப்பிட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி படப்பிடிப்பு நடத்தவும், 100 பேர் கொண்ட குழுவுடன் படப்பிடிப்பு நடக்கலாம் என்றும் கூறியுள்ளது.
இதைத்தொடர்ந்து எப்போது திரையரங்குகளும் திறக்கப்படும் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. தொடர்ந்து மத்திய அரசு திரையரங்குகள் திறந்தால் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்த விளக்கமான விதிமுறைகளை வெளியிட்டார்கள்.
தற்போது வருகிற நவம்பர் 10ஆம் தேதி முதல் திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்கலாம் என்று அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உள்ள பிரச்சனையின் காரணமாக தற்போதைக்கு புதிய படங்கள் எதுவும் திரையரங்குகள் திறக்கப்படும் வெளியிடுவதற்கான வாய்ப்புகள் கிடையாது என்று திட்டவட்டமாக சங்கம் அறிக்கை விடுத்துள்ளது.
புது படங்களை வெளியிட முடியாத சூழ்நிலை.. #பாரதிராஜா @offBharathiraja President #TFAPA @tfapatn pic.twitter.com/tNYCWDqjwO
— Johnson PRO (@johnsoncinepro) November 9, 2020