விஜய்யின் ‘லியோ’ சிறப்பு காட்சிக்கான அனுமதியில் அரசு புதிய கட்டுப்பாடு!
October 13, 2023 / 06:48 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் 67-வது படமான ‘லியோ’வை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லலித் குமார் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார். இதில் விஜய்-க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி ஆகியோர் நடித்துள்ளனர்.
இதற்கு அனிருத் இசையமைத்துள்ளார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட போஸ்டர்ஸ், சஞ்சய் தத் – அர்ஜுன் கேரக்டர்களின் GLIMPSE, 3 பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. படத்தை வருகிற அக்டோபர் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, ‘லியோ’ படத்துக்கான சிறப்பு காட்சியை காலை 9 மணிக்கு தான் துவங்க வேண்டும் என்றும், அக்டோபர் 19, 20, 21, 22, 23, 24 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 1:30 மணியுடன் காட்சிகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
#LEO – Revised GO clearly states that shows in TN can only start by 9AM and have to end by 1.30AM post midnight.