ஹாரர் படத்துக்கு நயன்தாராவின் பெயரா?… வருத்தத்தில் விக்னேஷ் சிவன்!

  • August 20, 2020 / 12:34 PM IST

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் ‘நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல்’ என நான்கு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம், நயன்தாராவுக்கு ரொம்பவும் ஸ்பெஷல்.

ஏனெனில், இந்த படத்தை அவரின் காதலரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார். இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், சமந்தாவும் நடிக்கவுள்ளனர். ஏற்கனவே, விஜய் சேதுபதி – நயன்தாராவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கி சூப்பர் ஹிட்டான படம் ‘நானும் ரௌடி தான்’. இந்த படத்தில் நயன்தாரா ‘காதம்பரி’ என்ற கதாபாத்திரமாக வலம் வந்திருந்தார். தற்போது, தமிழில் இந்த ‘காதம்பரி’ என்ற பெயரில் ஒரு புதிய ஹாரர் ஜானர் படம் ரெடியாகி வருகிறது.

இதனை அருள் என்பவர் இயக்கி, தயாரித்து, ஹீரோவாகவும் நடித்துள்ளார். சமீபத்தில், இப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட விக்னேஷ் சிவனை அணுகியிருக்கிறார் அருள். ஆனால், விக்னேஷ் சிவன் மறுத்து விட்டாராம். ஏனெனில், ‘காதம்பரி’ என்ற டைட்டிலில் நயன்தாராவை கதையின் நாயகியாக வைத்து ஒரு படத்தை இயக்கலாம் என விக்னேஷ் சிவன் ப்ளான் செய்திருந்தாராம். அந்த டைட்டிலை இப்போது பயன்படுத்த முடியாமல் போனதே என்று விக்னேஷ் சிவன் வருத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus