இந்தியன் 2 படத்திலிருந்து கசிந்த புதிய புகைப்படம் !

  • February 2, 2023 / 01:06 PM IST

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கமல் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் .பல பிரச்சனைகளுக்கு பிறகு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . நடிகை காஜல் ,ரகுல் ப்ரீத் , ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் இந்த படங்களில் நடித்து வருகின்றனர் . லைக்கா நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை தயாரிக்கிறார் .

சமீபத்தில் இந்தியன் 2 படத்தில் ஒரு பாடலுக்கு ” ஆர் .ஆர்.ஆர் ” படத்தில் ” நாட்டு நாட்டு ” பாடலுக்கு நடனமைத்த பிரேம் ரக்ஷித் நடனமைக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகி இருந்தது .

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடந்து வருகிறது . தற்போது அந்த படப்பிடிப்பு தலத்திலிருந்து புகைப்படம் லீக் ஆகி வைரலாகி வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus