நானே வருவேன் படத்திலிருந்து வெளியான புதிய போஸ்டர் !

  • August 23, 2022 / 08:48 PM IST

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் நடிகர் தனுஷ் முக்கியமானவர் . இவர் நடிப்பில் வெளியான கடைசி படம் மாறன். இந்த படம் ஓ.டி.டியில் வெளியாகி மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்றது . இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் பல படங்களில் நடித்து வருகிறார் .

குறிப்பாக நீண்ட இடைவெளிக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற கதையில் நடித்து முடித்துள்ளார் தனுஷ் . தற்போது வாத்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் தனுஷ் . மேலும் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதுவது , பாடுவது என பல துறைகளிலும் அசத்தி வருகிறார் தனுஷ் . அந்த வகையில் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார் .

இந்நிலையில் நானே வருவேன் படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க படத்தின் இயக்குனர் செல்வராகவன் நானே வருவேன் படத்திலிருந்து புதிய புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus