உன் பார்வையில் விழுந்த நாள் முதல்!!

2009-ஆம் ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான படம் வாமனன் .இந்த படத்தை அஹமத் இயக்கி இருந்தார்.நடிகை பிரியா ஆனந்த் இந்த படத்தில் நாயகியாக அறிமுகமாகி இருந்தார் .யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . இந்த படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றது .இந்த படத்திற்கு பிறகு புகைப்படம் என்கிற படத்தில் நடித்து இருந்தார் ப்ரியா ஆனந்த் . இந்த படம் அவருக்கு பெரிய அளவில் வெற்றியை தேடி தரவில்லை .

இதனால் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கினர் . தமிழில் சிறிய இடைவேளைக்கு பிறகு இவர் நடித்த படம் எதிர்நீச்சல் மற்றும் வணக்கம் சென்னை . இந்த இரண்டு படங்களும் இவரது திரை வாழ்வில் மிக முக்கியமான அமைந்தது .அதன் பிறகு இரும்பு குதிரை ,அரிமா நம்பி நம்பி என்று அடுத்து அடுத்து தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது இவர் நடிப்பில் அந்தகன் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது . மேலும் சுமோ மற்றும் காசே தான் கடவுளடா படமும் திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இந்நிலையில் நடிகை ப்ரியா ஆனந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய ரீல்ஸ் விடியோவை பதிவிட்டு இருக்கிறார் . உன் பார்வையில் விழுந்து நாள் முதல் பாடல் அதில் ஒலிக்கிறது . இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது .

Share.