நடிகர் வடிவேலுடன் குக் வித் கோமாளி ” ஷிவாங்கி ” !! வைரலாகும் ஸ்டில்

  • October 21, 2022 / 12:13 AM IST

தமிழில் மிகப் பிரமாண்ட படைப்புகளை வழங்கி வரும் லைகா புரடக்சன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு வைகைப்புயல் வடிவேலு நாயகனாக நடித்து வரும், “நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காமெடி கூட்டணியை தந்த, நடிகர் இயக்குநர் பிரபுதேவாவும், வைகைப்புயல் வடிவேலுவும் இப்படத்தில் ஒரு பாடலில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

தமிழ் மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்தவர் வைகைப்புயல் வடிவேலு, அவரது காமெடி இல்லாத வீட்டு திரையே தமிழ்நாட்டில் கிடையாது. இணைய உலகமே அவரது காமெடியில் தான் இயங்கி வருகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் நாயகனாக நடிக்கும் , “நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்தின் அறிவிப்பு வெளியான போதே படத்திற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியது. படத்தின் டைட்டிலோடு வெளியான மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் மிக அட்டகாசமான செய்தி வந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த படத்தின் டப்பிங் பணிகளில் பாதி முடிவடைந்து விட்டது . இன்னும் ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட உள்ளது . இந்நிலையில் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திக்கிருந்து புதிய ஸ்டில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது , இதில் நடிகர் வடிவேலுடன் குக் வித் கோமாளி ஷிவாங்கி இருக்கிறார் . தற்போது இந்த ஸ்டில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus