அடுத்த வார நாமினேஷனிலிருந்து தப்பிக்க போட்டியாளர்களுக்கு புது டாஸ்க்… வெளியானது ‘பிக் பாஸ் 4’ புது ப்ரோமோ!

  • October 14, 2020 / 08:49 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது . இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம்.

தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் ரியோ ராஜ் “இது உங்களோட daily டாஸ்க். இந்த டாஸ்க் உங்களை அடுத்த வார நாமினேஷனிலிருந்து உங்களை காப்பாத்தக்கூடிய சக்தி வாய்ந்தது. இதுக்காக நீங்க உங்களில் இருந்து ஒரு கூட்டாளியை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒருத்தர் ball-அ bowl-ல போட்டுட்டாருன்னா, அவர் ஒரு ஹவுஸ்மேட்டை சரியான காரணத்தோடு வெளியே அனுப்ப வேண்டும். கடைசியா நின்னு ஜெயிக்கிறவரும், அவர்கூட கூட்டு வச்சுக்கிட்ட நபரும் அடுத்த வாரம் நடக்கப்போற எவிக்ஷன் பிராஸஸிற்கு நாமினேட் செய்யப்பட மாட்டார்” என்று புதிதாக கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் பற்றி பேசுகிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.