வாரிசு படத்திலிருந்து லீக்கான புதிய வீடியோ !

  • August 16, 2022 / 05:23 PM IST

நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 66 படத்தின் பூஜை சென்னையில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்தது . அதன் பிறகு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது . அதன் பிறகு படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார் . தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார் . மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , பிரபு , நடிகை ஜெயசுதா , நடிகை சங்கீதா மற்றும் பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது . முழுக்க முழுக்க குடும்ப படமாக இந்த படம் உருவாக இருக்கிறது . இந்த படத்திற்கு வாரிசு என்று தலைப்பு வைத்துள்ளனர் .இந்நிலையில் வாரிசு படத்தின் ஐந்தாவது கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டிணத்தில் நடந்து வருகிறது.

இசையமைப்பாளர் தமன் முதன் முதலாக விஜய் படத்திற்கு இசையமைக்கிறார் . பொதுவாக நடிகர் விஜய் நடிக்கும் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும் எனவே தமன் இசை மீது அனைவரும் மிகவும் எதிர் பார்ப்புடன் இருக்கின்றனர் . இந்நிலையில் நடிகர் விஜய் வாரிசு படப்பிடிப்பில் நடிக்கும் காட்சி வெளியாகி லீக் ஆகி உள்ளது . தற்போது அந்த வீடியோ வைரலாகி வைரலாகி வருகிறது . வாரிசு படத்திலிருந்து அடிக்கடி படப்பிடிப்பு காட்சிகள் வெளியாகி வருகிறது .இதனால் விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus