செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக மாறியவர்கள்!

  • July 3, 2020 / 04:03 PM IST

நடிகை ப்ரியா பவானிசங்கர் பிரபல சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சின்னத்திரை சீரியலில் நடித்து தற்போது கதாநாயகியாக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்.

தற்போது திவ்யா துரைசாமி என்பவரும் இவரைப்போலவே செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக உருவெடுக்க போகிறார்.

திவ்யா துரைசாமி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் பிரபலமடைந்துள்ளார்.இந்த லாக்டவுனில் சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

நாளுக்கு நாள் இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகமாகிறது. ப்ரியா பவானி சங்கரை போலவே இவரும் செய்திவாசிப்பாளர் மற்றும் தொகுப்பாளராக இருந்து பின்பு சின்னத்திரை சீரியலில் நடிக்கத் தொடங்கினார்.

தற்போது புதிய செய்தி என்னவென்றால் இவருக்கு சுசீந்திரன் படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாம். லாக்டவுன் முடிந்ததும் இந்த படத்தில் அவர் நடிக்கப் போவதாகவும் செய்தி வந்துள்ளது.

எனவே இவர் ப்ரியா பவானி சங்கருக்கு அடுத்த செய்தி வாசிப்பாளர்கள் இருந்து நடிகையாக மாறியவராக திவ்யா துரைசாமி இடம்பெற்றுள்ளார். இந்தப்படத்தில் இவர்களுடன் இயக்குனர் பாரதிராஜாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus