அநியாயமாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர் !

  • December 19, 2022 / 09:00 AM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் இந்த வார கேப்டன் பதவிக்கு ஷிவின் , தனலட்சமி , மணிகண்டன் ஆகியோர் போட்டி போட்டனர் . கடுமையாக நடந்த இந்த போட்டியில் போட்டியாளர் மணிகண்டன் மூன்றாவது முறையாக கேப்டன் ஆனார் . அடுத்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் மணிகண்டன் மூன்றாவது முறையாக கேப்டன் ஆகி இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்து உள்ளார். மேலும் போட்டியாளர்கள் அடிக்கடி இரண்டு பேர் வெளியேறுவது பற்றி அடிக்கடி தங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தினர் .

இந்நிலையில் இந்த வாரம் வீட்டிலிருந்து வெளியேறுபவர்கள் பற்றி தகவல் வெளியாகி உள்ளது . போட்டியாளர் ஆயிஷா மற்றும் ராம் ஆகிய இருவரும் வீட்டில் இருந்து வெளியாகி உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது . சிறப்பாக விளையாடி வரும் ஆயிஷா எலிமினேட் ஆகி விட்டார் என்ற தகவல் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்து உள்ளது .

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus