அதிதி ராவ் ஹைதாரியை தொடர்ந்து இந்த படத்தில் இணைந்த புது ஹீரோயின்!

  • October 19, 2020 / 11:17 PM IST

நடிகர் சர்வானந்த் நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள “மகா சமுத்திரம்” எனும் படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு நடிகை அனு இமானுவேல் தற்போது ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வந்துள்ளது.

அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் சர்வானந்த் உடன் நடிகர் சித்தார்த்தும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வந்தது.

இது மட்டுமின்றி ஏற்கனவே இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகை அதிதி ராவ் ஹைதாரி ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது, இதை தொடர்ந்து தற்போது இரண்டாவது ஹீரோயினாக அனு இமானுவேல் சேர்ந்துள்ளார்.

விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனு இமானுவேல். இந்த திரைப்படத்தை ஏகே என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் இருவருக்கும் சமமான அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று இதன் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus