சென்சாருக்கு தீனி போடும் கதைகளை கொண்ட இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது அடுத்த இரண்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார். இந்த இரண்டு படங்களும் தனது “கிளைமாக்ஸ்” படத்தைப் போல ஆர்ஜிவி வேர்ல்ட் எனும் OTT தளத்தில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.
பிரபல திரைப்பட இயக்குனரான ராம் கோபால் வர்மா பல சர்ச்சைகளுக்குரிய கதைகளை எழுதி இயக்கியிருக்கிறார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் “கிளைமாக்ஸ்” .
இந்தப் படத்தை இவர் ஆர்ஜிவி வேர்ல்ட் எனும் OTT தளத்தில் வெளியிட்டிருந்தார்.
இதன் வெற்றியைத் தொடர்ந்து அவர், அடுத்த இரண்டு படங்களான ” த மேன் ஹூ கில்டு காந்தி” மற்றும் “கிட்னபிங் ஆப் கத்ரீனா கைப்” படங்களின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்டுள்ளார். இந்தப் படங்களையும் அவர் RGV வேர்ல்டில் வெளியிட உள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த படங்களின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டபோது ,அவர் தன் ட்விட்டர் பதிவில் ” கிளைமாக்ஸ் படத்தின் வெற்றியை எனது தொழிலின் தொடக்கமாகக் கருதுகிறேன். இனிமேல் பொறுத்திருந்து பாருங்கள் நான் பல கட்டுப்பாடுகளை தகர்க்கும் கதைகளை ஆர்ஜிவி வேர்ல்டில் ரிலீஸ் செய்வேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இவர் , திரையரங்குகள் மட்டுமல்ல , OTT தளத்திலும் சினிமாவின் எதிர்காலம் இல்லை. அனைவரும் தங்களது பர்சனல் ஆப் பில் படங்களை வெளியிடுவார்கள் என்று கூறியிருக்கிறார்.