அனுஷ்கா நடிப்பில் நிசப்தம் எப்போது ரிலீஸ்?!

  • September 17, 2020 / 08:34 PM IST

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை அனுஷ்கா. இவர் தற்போது ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் multi-lingual திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் மாதவன் மற்றும் அனுஷ்கா ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்கள். இந்த படத்தின் தயாரிப்பாளர் கோனா வெங்கட் இந்தப் படம் விரைவில் தியேட்டரில் வெளியாகும் ஒருவேளை நிலைமை சரியில்லை என்றால் இந்தப்படத்தை OTTயில் வெளியிடுவது குறித்து ஆலோசிக்கலாம் என்று கூறியிருந்தார்.

தற்போது புதிய தகவல் என்னவென்றால் இந்த படத்தை தியேட்டரில் வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டதாகவும், விரைவில் இந்த படம் OTTயில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்கள்.

இந்த படத்தில் மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி ஆகியோருடன் நடிகை அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்புராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

தமிழில் இந்த திரைப்படம் “நிசப்தம்” என்ற டைட்டிலில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் மாதவன் மியூசியனாகவும், அனுஷ்கா ஆர்டிஸ்டாகவும் நடித்துள்ளார்கள். விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus