நயன்தாராவுக்கு பதிலாக நடித்த நித்யா மேனன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

  • August 8, 2023 / 07:27 PM IST

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு (2022) ஜூன் 9-ஆம் தேதி நடிகை நயன்தாரா பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினருக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.

இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா படம், ஹிந்தியில் ‘ஜவான்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு ரிலீஸான தமிழ் படம் ‘திருச்சிற்றம்பலம்’.

இதனை இயக்குநர் மித்ரன்.ஆர்.ஜவஹர் இயக்கியிருந்தார். இதில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி ஷங்கர் என மூன்று ஹீரோயின்ஸ் நடித்திருந்தனர். ஆனால், இந்த படத்தில் நித்யா மேனன் ரோலில் முதலில் நடிக்கவிருந்தது நயன்தாரா தானாம். பின், சில காரணங்களால் நயன்தாராவால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus