சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நிவேதா தாமஸ். நிவேதா தாமஸ் அறிமுகமான முதல் படத்திலேயே டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்-க்கு தங்கச்சியாக நடித்திருந்தார். அந்த படம் தான் ‘குருவி’. அதன் பிறகு நடிகை நிவேதா தாமஸுக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘போராளி, நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா, பாபநாசம், தர்பார்’ என படங்கள் குவிந்தது. இதில் ‘பாபநாசம்’ மற்றும் ‘தர்பார்’ ஆகிய இரண்டு படங்களிலும் சூப்பராக நடித்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார் நிவேதா தாமஸ். நிவேதா தாமஸ் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி நிவேதா தாமஸ் ட்விட்டரில் “கொரோனா டெஸ்ட் எடுத்தபோது எனக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், நிவேதா தாமஸ் நடித்து கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி ரிலீஸான புதிய தெலுங்கு படமான ‘வக்கீல் சாப்’-ஐ திரையரங்கிற்கு சென்று ஆடியன்ஸுடன் படம் பார்த்திருக்கிறார்.
அப்போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டும், நிவேதா தாமஸ் திரையரங்கிற்கு சென்றது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது, இது தொடர்பாக நிவேதா தாமஸ் “நான் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்து விட்டேன். அதனால் தான் திரையரங்கிற்கு சென்று படம் பார்த்தேன்” என்று கூறியுள்ளார்.