‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்ட ரஜினியின் ரீல் மகள்… வைரலாகும் ஸ்டில்!

  • June 17, 2021 / 01:10 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நிவேதா தாமஸ். நிவேதா தாமஸ் அறிமுகமான முதல் படத்திலேயே டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்-க்கு தங்கச்சியாக நடித்திருந்தார். அந்த படம் தான் ‘குருவி’. அதன் பிறகு நடிகை நிவேதா தாமஸுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘போராளி, நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா, பாபநாசம், தர்பார்’ என படங்கள் குவிந்தது. இதில் ‘பாபநாசம்’ மற்றும் ‘தர்பார்’ ஆகிய இரண்டு படங்களிலும் சூப்பராக நடித்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார் நிவேதா தாமஸ். நிவேதா தாமஸ் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது நிவேதா தாமஸ் ‘ஷாகினி தாகினி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ‘மிட்நைட் ரன்னர்ஸ்’ என்ற கொரியன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காம். இந்நிலையில், இன்று நடிகை நிவேதா தாமஸ் ‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அவரே தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus