நிவின் பாலி – அஞ்சலி ஜோடியாக நடிக்கும் தமிழ் படம்… இயக்குநர் யார் தெரியுமா?

மலையாள சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நிவின் பாலி. இப்போது, நிவின் பாலி நடிப்பில் நான்கு மலையாள திரைப்படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நிவின் பாலி தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய தமிழ் படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ராம் இயக்க உள்ளாராம். இதனால் நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர் ராமின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர். இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி டூயட் பாடி ஆடவுள்ளார். மேலும், மிக முக்கிய ரோலில் சூரி நடிக்க உள்ளாராம்.

இதனை ‘V ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க உள்ளார். இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இந்த தகவலை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மிக விரைவில் இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.