Yezhu Kadal Yezhu Malai : நிவின் பாலி – ராம் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’… GLIMPSE விமர்சனம்!

  • January 2, 2024 / 06:44 PM IST

மலையாள சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நிவின் பாலி. இப்போது இவர் நடிப்பில் ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற தமிழ் படமும், இரண்டு மலையாள படங்களும் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ராம் இயக்கியுள்ளார். இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோலில் சூரி நடித்துள்ளாராம்.

இதனை ‘V ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார், மதி.வி.எஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இன்று இதன் GLIMPSE-ஐ ரிலீஸ் செய்துள்ளனர். இந்த GLIMPSE படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மிக விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus