விஜய்க்கு நிகராக இந்தியாவில் யாருமே இல்லை !

  • January 7, 2023 / 09:13 PM IST

பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான தில் ராஜு, விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தின் மூலம் கோலிவுட்டில் படம் தயாரித்துள்ளார் . மேலும் அவர் சமீபத்தில் விஜய்யை தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகர் எனக் கூறிய அவர், ட்ரோல்களை எதிர்கொண்டார். ஒரு ஹீரோவின் நட்சத்திர மதிப்பு திரையரங்கு வருவாயைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது என்று தில் ராஜு சமீபத்தில் ஒரு ஊடக உரையாடலில் விளக்கினார்.

தயாரிப்பாளர் தில் ராஜுவின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர் . இந்த சர்ச்சை ஓய்ந்த சில நாட்களில் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் நடிகர் சரத்குமார் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சையை தொடங்கி வைத்தார் . இதற்கும் சினிமா துறை சார்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் .

இந்நிலையில் தற்போது இயக்குநர் சீமான் தற்போது நடிகர் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று பேசி உள்ளார் . சமீபத்தில் சீமான் ஒரு பட விழாவில் பங்கேற்று பேசினார் அதில் ” நடிகர் விஜய் சினிமாவிற்கு வருவதற்கு எஸ் .ஏ .சி காரணமாக இருக்கலாம் ஆனால் இன்றைக்கு தமிழ் சினிமாவில் உயர்ந்த நட்சத்திரமாக சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்றால் அது விஜய்யின் உழைப்பு தான் காரணம் என்றும் நடிகர் விஜய் மாதிரி நடனமாட இந்தியாவில் யாருமில்லை என்று கூறியுள்ளார் .

சீமான் நடிகர் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று கூறி ரஜினி ரசிகர்களை வம்புக்கு இழுத்துள்ளார் . இதனால் அவருக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus