விடுதலை படப்பிடிப்பிலிருந்து வெளியான மாஸான ஸ்டில்ஸ்

  • December 20, 2022 / 12:01 AM IST

இந்திய சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன் . இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் அசுரன் . இந்த படம் பெரிய அளவில் பெற்றது . அசுரன் படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கி வருகின்ற படம் . இந்த படத்தில் சூரி நாயகனாக நடித்து வருகிறார் . எல்ரெட் குமார் இந்த படத்தை தயாரித்து வருகிறார் . விஜய் சேதுபதி , இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் , ராஜிவ் மேனன் ஆகியோர் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் .

இரண்டு பாகங்களாக உருவாகி வரும் விடுதலை படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார் . எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் தயாராகி வருகிறது . படத்தின் படப்பிடிப்பு காட்டுப் பகுதியில் நடந்து வருவதால் பல சவால்களை படக்குழு எதிர்கொண்டு வருகிறது இதனால் படம் வெளியாவதில் தாமதம் ஆகி வந்தது

இந்நிலையில் விடுதலை படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க நடிகர் சூரி தற்போது விடுதலை படப்பிடிப்பு நடக்கும் காட்டிலிருந்து சில புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus