2006 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படலவுலகில் தன் நடிப்பு பயணத்தை தொடங்கிய நஸ்ரியா நசீம், 2013ஆம் ஆண்டு தமிழில் வெளியான “நேரம்” படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக வலம் வர ஆரம்பித்தார்.
தனது க்யூட்னஸிற்காக தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நஸ்ரியா, நேரம் படத்தை தொடர்ந்து “ராஜா ராணி”, “நய்யாண்டி”, “வாயை மூடி பேசவும்”, “திருமணம் எனும் நிக்கா” என சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இன்று வரை அவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.
கடந்த 2014ஆம் ஆண்டு மலையாள நட்சத்திரமான ஃபகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் சேர்ந்து கடைசியாக “டிரான்ஸ்” எனும் மலையாள படத்தில் ஜோடியாக நடித்து இருந்தார்கள்.
தன் கணவரை வைத்து “வரதன்” மற்றும் “கும்பலாங்கி நைட்ஸ்” ஆகிய படங்களை தயாரித்தும் உள்ளார் நஸ்ரியா. நடிகர் தயாரிப்பாளர் மட்டுமல்லாது பாடகராகவும் இருந்துள்ளார் நஸ்ரியா.
தற்போது லாக்டவுனில் தனது கணவருடன் நேரத்தை செலவிட்டு வரும் நஸ்ரியா நசீம் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவான ஒரு நபர். ஆனால் ஃபகத் பாசில் சோசியல் மீடியாவில் இல்லை. சமீபத்தில் ஃபகத் பாசில் பெயரில் ஒரு ஃபேக் அக்கவுண்ட் இருப்பதையும் அதை சில பிரபலங்கள் கூட ஃபாலோ செய்து வருவதையும் கண்ட நஸ்ரியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தனது கணவர் ஃபகத் அல்ல என்று ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.
ஃபகத் குடும்பத்தில் நஸ்ரியா நசீம் மற்றும் ஃபகத்தின் சகோதரர் ஃபர்ஹான் பாசில் மட்டுமே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார்கள்.