பாலிவுட்டுக்கு செல்லும் மற்றொரு தமிழ் இயக்குனர்!

கடந்த 2012-ஆம் வெளியான படம் காதலில் சொதப்புவது எப்படி . இந்த படத்தை இயக்கி அதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பாலாஜி மோகன் .இந்த படத்தில் நடிகர் சித்தார்த் கதாநாயகனாக நடித்து இருந்தார் . நடிகை அமலா பால் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார் . இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி இருந்தது . இந்த படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது .

இந்த படத்தை தொடர்ந்து வாயை மூடி பேசவும் என்கிற படத்தை இயக்கி இருந்தார் . இந்த படத்தில்
துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்து இருக்கிறார் . நடிகை நஸ்ரியா இந்த படத்தில் நாயகியாக நடித்து இருந்தார் . இந்த படமும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . அதன் பிறகு நடிகர் தனுஷை வைத்து மாறி என்கிற படத்தை எடுத்தார் பாலாஜி மோகன் . இந்த படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடித்து இருந்தார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து மாறி 02 படத்தை இயக்கி இருந்தார் . அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை .

இந்நிலையில் பாலாஜி மோகன் அடுத்து பாலிவுட் படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . அந்த படத்தின் பெயர் கிளிக் ஷங்கர் என்றும் காவல் அதிகாரி ஒருவரின் கதை என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது . இயக்குனர்கள் அட்லீ , மதுமிதா , சுதா , போன்ற இயக்குனர்களை தொடர்ந்து பாலாஜி மோகனும் தற்பொழுது பாலிவுட் சென்று உள்ளார் .

Share.