சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோ, ஹீரோயினுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ஹீரோஸ் & ஹீரோயின்ஸ் நடித்து வருகிறார்கள். இந்த வாரம் தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ…
1.ஜப்பான் :
சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் ‘ஜப்பான்’, ‘சர்தார் 2’, ‘கைதி 2’ மற்றும் இயக்குநர் நலன் குமரசாமி படம், இயக்குநர் பிரேம் குமார் படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘ஜப்பான்’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ராஜு முருகன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சுனில், விஜய் மில்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் கார்த்தியின் கேரியரில் 25-வது படமாம். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
சமீபத்தில், வெளியிடப்பட்ட இதன் டீசர், பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை வருகிற நவம்பர் 10-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
2.ஜிகர்தண்டா டபுள்X :
சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இயக்கத்தில் 2014-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜிகர்தண்டா’. இதில் சித்தார்த், பாபி சிம்ஹா இணைந்து நடித்திருந்தனர்.
இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. தற்போது, இதன் இரண்டாம் பாகமான ‘ஜிகர்தண்டா டபுள்X’ உருவாகியுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்துள்ளனர்.
இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனை ‘ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் – ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
சமீபத்தில், வெளியிடப்பட்ட இதன் டீசர், பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. படத்தை வருகிற நவம்பர் 10-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
3.ரெய்டு :
தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம் பிரபு. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ரெய்டு’. இந்த படத்தை இயக்குநர் கார்த்தி இயக்கியுள்ளார்.
இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தரராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.
இதற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார், கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ளார், மணிமாறன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில், இதன் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. படத்தை வருகிற நவம்பர் 10-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.