வைரமுத்துவை நடிக்க வைக்க சம்பளத்தை இழந்த இயக்குநர் !

  • December 24, 2022 / 11:30 AM IST

தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியராக உள்ளவர் வைரமுத்து , இவரின் வரிகளுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது . வைரமுத்து இதுவரை ஒரு ஒரு படத்தில் மட்டுமே நடித்து உள்ளார் . இயக்குநர் பிரவீன் காந்தி இயக்கிய ஜோடி தான் அது .

இது பற்றி இயக்குநர் பிரவீன் காந்தி கூறுகையில் ” ஜோடி படத்தில் ‘காதல் கடிதம் தீட்டவே..’ என்ற பாடல் வரும். அதற்கு முந்திய காட்சியில், பிரசாந்த் தன் காதலுக்காக வைரமுத்துவிடம் டிப்ஸ் கேட்கும் சீன் இருந்தது .

அந்த காட்சியில் வைரமுத்து நடிக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் அவர் மறுத்தார். நான் மிகவும் வற்புறுத்திய பிறகு மிகச் சில நிமிடங்கள் வரும் அந்த காட்சியில் நடித்தார்” என்ற பிரவின் காந்தி, “படத்தின் பட்ஜெட் அதிகமானதால் அந்த படத்தின் வைரமுத்துவை நடிக்க வைக்க வைரமுத்துவிற்கான சம்பளத்தை என் சம்பளத்தில் கழிக்க சொல்லிவிட்டேன்” என்றும் கூறினார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus