இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

  • October 20, 2023 / 10:17 AM IST

சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோ, ஹீரோயினுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ஹீரோஸ் & ஹீரோயின்ஸ் நடித்து வருகிறார்கள். இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ…

1.லியோ :

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் 67-வது படமான ‘லியோ’வை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லலித் குமார் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார். இதில் விஜய்-க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு அனிருத் இசையமைத்துள்ளார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட போஸ்டர்ஸ், சஞ்சய் தத் – அர்ஜுன் கேரக்டர்களின் GLIMPSE, 3 பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. படத்தை நாளை (அக்டோபர் 19-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

2.டைகர் நாகேஸ்வரராவ் :

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி தேஜா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘டைகர் நாகேஸ்வரராவ்’. இந்த படத்தை இயக்குநர் வம்சீ இயக்கியுள்ளார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் ரேணு தேசாய், அனுபம் கெர், முரளி ஷர்மா, நுபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், மதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில், இப்படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்தனர். இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது.

படத்தை வருகிற அக்டோபர் 20-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமில்லாமல், தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

3.கண்பத் :

பாலிவுட் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் டைகர் ஷெராஃப். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய ஆக்ஷன் படம் ‘கண்பத்’. இந்த படத்தை இயக்குநர் விகாஸ் பாஹ்ல் இயக்கியுள்ளார்.

இதில் டைகர் ஷெராஃப்புக்கு ஜோடியாக க்ரித்தி சனோன் நடித்துள்ளார்.மேலும், மிக முக்கிய ரோல்களில் அமிதாப் பச்சன், ரகுமான், கிரீஸ் குல்கர்னி, ஸ்ருதி மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதன் பாடல்களுக்கு விஷால் மிஸ்ரா, அமித் த்ரிவேதி, வொயிட் நாய்ஸ் ஸ்டுடியோஸ், Dr.ஜீயஸ் ஆகியோர் இசையமைத்துள்ளனர், சலீம் சுலைமான் பின்னணி இசையமைத்துள்ளார். சமீபத்தில், இப்படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்தனர். இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது. படத்தை வருகிற அக்டோபர் 20-ஆம் தேதி ஹிந்தி மொழி மட்டுமில்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Focus Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus