வைரலாகும் விஜய் சேதுபதியின் லுக் !

  • May 31, 2022 / 03:32 PM IST

மாநகரம் , கைதி , மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியவர் நடிகர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்பொழுது நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வருகிறார் .இந்த படத்தில் நடிகர்கள் பஹத் பாசில், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‛விக்ரம்’ படம் அதிரடி ஆக்சன் கதையில் தயாராகி உள்ளது. மேலும் நடிகர் சூர்யா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . இதனால் படத்தின் மீதான மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் கமல் நடிப்பில் 1986வது வருடத்தில் விக்ரம் என்கிற படம் வெளியானது. அந்த படத்தில் சத்யராஜ் பயங்கர வில்லனாக நடித்து இருந்தார். தற்போது லோகேஷ் இயக்கத்தில் வெளியாக உள்ள விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து இருக்கிறார்.

இவர்கள் இரண்டுப்பேரின் புகைப்படத்தை ஒப்பிட்டு நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் . அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus