தனுஷின் மனதுக்கு மிக நெருங்கிய படம் !

கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான படம் கர்ணன் . இந்த படம் இயக்குனர் மாரிசெல்வராஜின் இரண்டாவது படமாக வெளியானது . நடிகர் தனுஷ் நடித்த இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு அவர்கள் தயாரித்தார். நடிகர்கள் லால் , நட்டி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான அனைத்து பாடல்களும் மிக பெரிய வெற்றியை பெற்றது . குறிப்பாக கண்டா வர சொல்லுங்க என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.

தனுஷுக்கு ஜோடியாக ராஜீஷா விஜயன் நடித்து இருந்தார் . தமிழில் இவர் நடித்த முதல் படம் இது .1995-ஆம் ஆண்டு கொடியங்குளதில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து எடுத்த இந்த படத்திற்கு தேனீஸ்வரர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கொரோனா பரவல் காரணமாக 50 சதவீத பார்வையாளர்களுடன் பார்க்க அனுமதி அளித்தது தமிழ்நாடு அரசு . 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி இருந்தாலும் தமிழ்நாட்டில் மட்டும் 45 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது இந்த படம்.

இந்த நிலையில் படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிய நிலையில் நடிகர் தனுஷ் ஒரு ட்வீட் செய்துள்ளார் . அதில் இயக்குனர் மாரிசெல்வராஜ் , தயாரிப்பாளர் தாணு , இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் , மற்றும் படத்தில் வேலை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் , மேலும் இந்த படம் தன் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம் என்று தெரிவித்துள்ளார்.

Share.