தமிழ் சினிமாவில் வலம் வரும் டாப் 10 ஹீரோக்களின் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா?

சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள் ஹீரோக்கள். டாப் 10 ஹீரோக்களின் சொத்து மதிப்பு இதோ..

1.ரஜினிகாந்த் :

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். ‘அண்ணாத்த’-க்கு பிறகு ரஜினியின் 169-வது படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்க உள்ளார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் ரஜினியின் சொத்து மதிப்பு ரூ.410 கோடியாம்.

2.கமல்ஹாசன் :

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படமான ‘விக்ரம்’ஐ லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை வருகிற ஜூன் 3-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். நடிகர் கமலின் சொத்து மதிப்பு ரூ.176.93 கோடியாம்.

3.விஜய் :

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரின் புதிய படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. ‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை இயக்குநர் வம்சி இயக்க உள்ளார். இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு ரூ.417 கோடியாம்.

4.அஜித் :

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித். இவரின் ‘வலிமை’ கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை இயக்குநர் ஹெச் வினோத்தும், 62-வது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவனும் இயக்க உள்ளனர். நடிகர் அஜித்தின் சொத்து மதிப்பு ரூ.300 கோடியாம்.

5.சூர்யா :

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, இயக்குநர் பாலா இயக்கும் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் பாலா இயக்கும் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ஆரம்பமானது. நடிகர் சூர்யாவின் சொத்து மதிப்பு ரூ.188 கோடியாம்.

6.தனுஷ் :

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, திருச்சிற்றம்பலம், வாத்தி’, இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், அருண் மாதேஸ்வரன், சேகர் கம்முலா படங்கள் மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என 9 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு ரூ.200 கோடியாம்.

7.சிவகார்த்திகேயன் :

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அயலான், டான்’ மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம், இயக்குநர் அனுதீப் கேவி படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு ரூ.175 கோடியாம்.

8.விஜய் சேதுபதி :

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. நடிகர் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு ரூ.110 கோடியாம்.
9.கார்த்தி :

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’, ‘விருமன்’ மற்றும் ‘சர்தார்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தை வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். நடிகர் கார்த்தியின் சொத்து மதிப்பு ரூ.97 கோடியாம்.

10.விக்ரம் :

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இப்போது விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன்’ மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. நடிகர் விக்ரமின் சொத்து மதிப்பு ரூ.151 கோடியாம்.

Share.