சமீபத்தில் அறிமுகமாகி சில படங்களில் மட்டுமே நடித்த மேகா ஆகாஷ் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளார். தெலுங்கு படத்தில் அறிமுகமாகி தமிழ் படங்களில் நடித்துவந்த இவர் தற்போது பாலிவுட்டிலும் கால்பதித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு ஹனு ராகவாபுடி இயக்கத்தில் வெளியான தெலுங்கு படமான “லைய்” படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் மேகா ஆகாஷ். இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “பேட்டை” படத்தில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். பின்னர் அதே வருடம் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த “வந்தாராஜாவாதான்வருவேன்” மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த “எனை நோக்கி பாயும் தோட்டா” ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.
அறிமுகப் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ், சிம்பு என பெரிய முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த இவர், 2019 ஆம் வருடம் வெளிவந்த “சாட்டிலைட் சங்கர்” என்னும் பாலிவுட் படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் “ஒரு பக்க கதை” படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் டிரெய்லர் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்தின் உரிமையை ஜி5 நிறுவனம் பெற்றுள்ளது.