93 ஆவது ஆஸ்கர் அகாடமி விருது வழங்கும் விழா தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று செய்தி வெளியாகியுள்ளது. இந்த கொரோனா ஊரடங்கு காரணமாக சுமார் 40 வருடங்களில் முதல் முறையாக இந்த நிகழ்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
1929ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆஸ்கர் அகாடமி விருதுகள் வழங்கும் விழா, இன்றுவரை நல்ல திரைப்படங்களையும் திரைப்படக் கலைஞர்களையும் பாராட்டி வருவதற்கான சிறந்த விருதாக அமைக்கப்பட்டுள்ளது.
1940 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அனைத்து ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின் வெற்றியாளர்கள், யார் என்பதை முன்னமே தெரிவித்து விடுவார்கள். 1941 ஆம் ஆண்டு முதலே வெற்றியாளர்களின் பெயர்களை சீல் செய்யப்பட்ட உறைக்குள் வைத்து விழாவன்று வெளியிடத் தொடங்கும் முறை பின்பற்றப்படுகிறது.
இந்த விருதுகளை அகாடமி ஆஃ மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் ஒவ்வொரு வருடமும் வெளியிடுவார்கள்.
2021 ஆம் வருடம் பிப்ரவரியில் நடைபெறவிருந்த , 93 வது அகாடமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி தற்போது 2021 ஏப்ரல் 25 ஆம் தேதி நடைபெறும் என்று அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் இந்த நிலையில் ,இந்த அகாடமி விருதுகள் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தாமதத்திற்கு கூடுதலாக அகாடமி விருதுகளுக்கான தகுதி பரிந்துரை பட்டியலை நீடிப்பதற்கும் இந்த அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் இந்த நாமினேஷனிர்க்கு படங்களை அனுப்புவதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்படும் என்ற இந்த அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
பிரிட்டிஷ் அகாடமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.