தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது லைக்கா நிறுவனம் . லைக்கா நிறுவனம் சமீபத்தில் தயாரித்த டான் , பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று உள்ளது.
இந்நிலையில் தற்போது லைக்கா நிறுவனம் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் அந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நாயகனாக நடிக்க உள்ளனர் . இசைப்புயல் ஏ.ஆர் .ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் . மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்ற தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது .
மேலும் படத்திற்கு லால் சலாம் என்று தலைப்பு வைத்துள்ளனர் .கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வருகிறது . இந்நிலையில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் , ரஜினியை பாடாய்படுத்தி வருகிறாராம் ஐஸ்வர்யா. அதுமட்டுமின்றி ஏதோ பத்து, பதினைந்து படங்கள் ஹிட் கொடுத்தது போல நடந்து கொள்கிறாராம்.சூப்பர் ஸ்டாரின் மகள் என்ற அந்தஸ்தை வைத்து இப்படி நடந்து கொள்கிறார் என்று கூறப்படுகிறது .அதுமட்டுமின்றி லால் சலாம் படத்தில் காஸ்டியூம் டிசைனரை ஏறகனவே வெளியேற்றிவிட்டார் . மேலும் தனக்கு பிடிக்காத ஒவ்வொருவரையும் லால் சலாம் படத்திலிருந்து தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினி வெளியேற்றி வருகிறாரார் என்று கூறப்படுகிறது .