பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நடிகை ஓவியாவின் சர்ச்சையான பதிவு!

  • July 29, 2020 / 05:37 PM IST

தமிழ்சினிமாவில் சற்குணம் இயக்கத்தில் 2010ஆம் வருடம் வெளிவந்த “களவாணி” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா. இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

தொடர்ந்து மெரினா, மூடர்கூடம், கலகலப்பு, யாமிருக்க பயமேன், ஹலோ நான் பேய் பேசுகிறேன் போன்ற படங்களில் நடித்துவந்த ஓவியா, 2017 ஆம் ஆண்டு “பிக்பாஸ்” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பாளரானார்.

இந்த நிகழ்ச்சி மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்ற ஓவியா பின்பு எந்தக் கருத்தை வெளியிட்டாலும் எந்த படத்தில் நடித்தாலும் அது பரபரப்பாக பேசப்பட்டது. இவருக்கென தனி ஆர்மி உருவாக்கினார்கள்.

தற்போது ட்விட்டரில் தன் கருத்துக்களை பதிவிட்டு வரும் ஓவியா சமீபத்தில் “பிக்பாஸ் நிகழ்ச்சி தடை செய்யப்பட வேண்டுமா?” இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று பரபரப்பாக ஒரு கருத்து கணிப்பை பதிவிட்டிருந்தார்.

https://twitter.com/OviyaaSweetz/status/1287039303176998912?s=19

டிஆர்பி காக பங்கேற்பாளர்களை டார்ச்சர் செய்து தற்கொலை செய்யும் அளவிற்கு இனிமேல் அவர்கள் தள்ள மாட்டார்கள் என்று நம்புகிறேன் என்றும் கூறியிருந்தார். இவரின் இந்தப்பதிவு பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை கமெண்ட் செய்து வந்தார்கள்.

இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் இவரின் இந்த பதிவிற்கு ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். பணம், புகழ் வருவதற்காக இப்படி ஒப்பந்தங்களில் கண்மூடித்தனமாக கையெழுத்திட்டு விடுகிறீர்கள், பின்பு பின்விளைவுகளை தாங்கமுடியாமல் இப்படி அறிக்கை வெளியிடுகிறீர்கள். அதற்கு பதிலாக ஒப்பந்தங்களை முழுமையாக படித்துவிட்டு அதன் அபாயங்களை உணர்ந்து பின்பு கையெழுத்திட்டிருக்கலாமே என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு தற்போது பதிலளித்துள்ள ஓவியா “ஒப்பந்தம் என்பது யாரையும் மனதளவில் துன்புறுத்தி அவரை தற்கொலை செய்யுமளவிற்கு செய்யும் துருப்பு சீட்டு அல்ல. அனைவரது உயிரும் முக்கியமானது. நான் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய கூறவில்லை, ஆனால் பங்கேற்பாளர்களுக்கு மனிதாபிமானம் காட்டும் விதமாக நடந்து கொள்ளலாம். நாம் அனைவரும் மனிதர்கள் தானே” என்று கூறியிருக்கிறார்.

மேலும் அவர் “நான் இந்த நிகழ்ச்சியை விட்டு வரும்போதே மனதளவில் பாதிக்கப்பட்டவள் என்று கூறிவிட்டார்கள். இதைப்பற்றி நான் பேசவே முடியாது, ஏனென்றால் தற்போது மனிதத்தன்மையற்ற கார்ப்பரேட் கம்பெனி ஆட்சிதான் நடந்து வருகிறது. இதனால் எதுவும் மாறாது என்று எனக்கு தெரியும், மேலும் இன்னொரு சுஷாந்த் உருவாகக் கூடாது என்று நான் நினைத்தேன். அது என் தவறு தான்” என்று பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/OviyaaSweetz/status/1288038439556796416?s=19

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus