சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போஸ்டரை வெளியிடவுள்ள நடிகை ஓவியா!

  • August 12, 2020 / 06:26 PM IST

தற்போது இணைய தளம் முழுவதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 45 ஆண்டுகளை திரையுலகில் நிறைவு செய்ததையடுத்து அவரை வாழ்த்தி வெளியான பதிவுகளும் போஸ்டர்களும் தான் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் ரசிகர்கள் காமன் டிபி ஒன்றை வெளியிட்டு அதை இணையதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இந்த காமன் டிபியை பல சினிமா பிரபலங்கள் வெளியிட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

இந்நிலையில் 45 ஆண்டுகளை திரையுலகில் நிறைவு செய்துள்ள ரஜினிகாந்தை பற்றி விரைவில் ஒரு போஸ்டரை வெளியிடப் போவதாகவும் அந்த போஸ்டர் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் இந்த போஸ்டரை பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகை ஓவியா வெளியிடவுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஓவியா வெளியிடும் இந்த ஸ்பெஷல் போஸ்டரை எதிர்பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

https://twitter.com/OviyaaSweetz/status/1293156323299717123?s=19

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus