பி.சி .ஸ்ரீ ராம் போட்ட புதிய கண்டிஷன் !

  • July 24, 2022 / 02:30 AM IST

இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.சி.ஸ்ரீராம். இவர் ஒளிப்பதிவாளர் மட்டுமில்லை சில படங்களையும் இயக்கி உள்ளார் . குறிப்பாக கமல், அர்ஜுன் நடித்த குருதிப்புனல், விக்ரம் நடித்த மீரா, வானம் வசப்படும் படங்களை இயக்கி இருக்கிறார் வானம் வசப்படும் தோல்வியை அடைந்த காரணத்தால் இவர் படம் ஏதும் இயக்கவில்லை .

இந்நிலையில் பி.சி.ஸ்ரீராம் இனி படம் இயக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது . ஐதராபாத்தில் பேட்டியளித்துள்ள பி.சி.ஸ்ரீராம் ” நானும் இயக்குனராகும் ஆசையில் சில படங்களை இயக்கினேன். ஆனால் நல்ல பலன் கிடைக்கவில்லை. ஒரு படத்தை இயக்குவது வேறு, ஒளிப்பதிவு செய்வது வேறு என்பதை அனுபவத்தில் புரிந்து கொண்டேன். இயக்குனர் என்பவர் அனைத்து துறைகளையும் கையாள வேண்டும், அது என்னால் முடியவில்லை. அதனால் இனி படம் இயக்கப்போவதில்லை “என்று கூறியுள்ளார் .

மேலும் ஒரு படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவும் சில நிபந்தனைகள் வைத்திருக்கிறேன். முழு கதையும் எனக்கு சொல்லப்பட வேண்டும், அந்த கதை எனக்கு பிடிக்க வேண்டும். எனது பணிக்கு முழு சுதந்திரம் வேண்டும். இதற்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே பணி செய்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus