பா. ரஞ்சித்துக்கு பிடித்த உணவு என்ன தெரியுமா?

  • December 20, 2022 / 12:09 AM IST

இயக்குனர் பா .ரஞ்சித் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் நட்சத்திரம் நகர்கிறது . துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் மற்றும் கலையரசன் நடிப்பில் இந்த படம் வெளியானது .. பா.ரஞ்சித்தின் வழக்கமான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனுக்கு பதிலாக இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக டென்மா பணியாற்றினார் . நட்சத்திரம் நகருகிறது 31 ஆகஸ்ட் 2022 அன்று திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களை பெற்றது . இதனை தொடர்ந்து நடிகர் விக்ரமை வைத்து இயக்குனர் பா.ரஞ்சித் படம் இயக்கி வரறார் .

ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் தயாரித்து வருகிறார் . இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார் கே.ஜி.எஃப் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகிறது .

பார்வதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் பா. ரஞ்சித்தகடம் ஒரு பேட்டியில் தங்களுக்கு பிடித்த உணவு எது என்று கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த இயக்குநர் பா. ரஞ்சித் “மாட்டிறைச்சியை ” தான் விரும்பி சாப்பிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus