தமிழ் திரையுலகில் “அட்டகத்தி” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பின்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து “காலா” படத்தை இயக்கும் அளவிற்கு உயர்ந்து தற்போது ரசிகர்களிடையே தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் இயக்குனர் பா.ரஞ்சித்.
அட்டக்கத்தி திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து “மெட்ராஸ்” எனும் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தனக்கென தனி ஸ்டைலை கடைப்பிடித்து வருகிறார் பா.ரஞ்சித்.
இதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் “கபாலி”, “காலா” என்று இரண்டு படங்களை இயக்கினார். திரையுலகில் நுழைந்த சில காலத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்கிய இயக்குனர் என்ற பெருமையை பெற்றார் பா.ரஞ்சித்.
சமீபத்தில் பா.ரஞ்சித் பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்கி வருவதாகவும், ஆர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருவதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது.
தற்போது பா.ரஞ்சித் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் “குதிரைவால்” படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இவர் வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படம் மும்பை ஃபிலிம் ஃபெஸ்டில் திரையிடுவதற்கு தேர்வாகியுள்ளதாகவும், ஐந்து இந்தியக் கதைகளில் ஒரு கதையாக இதை தேர்ந்தெடுத்தால் பெருமை அடைந்துள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தில் நடிகர் கலையரசன் மற்றும் அஞ்சலி பட்டீல் நடித்துள்ளார்கள்.
https://twitter.com/beemji/status/1301159262744313857?s=19