வெளியானது பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தின் முதல் பார்வை !

இயக்குனர் பா .ரஞ்சித் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் சார்பட்டா பரம்பரை .இந்த படத்தில் ஆர்யா , பசுபதி , ஜான் விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தனர் . சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . திரையரங்கில் வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் படம் அமேசான் ஓடிடி -யில் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது .

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரமை வைத்து ஒரு படம் ரஞ்சித் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.
ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் . ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரிக்க உள்ளார் .

இந்நிலையில் சார்பட்டா பரம்பரை அடுத்து ரஞ்சித் இயக்கி உள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது . இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் நாயகனாக நடித்து இருக்கிறார் . துஷாரா விஜயன் படத்தின் நாயகியாக நடித்து இருக்கிறார் .கலையரசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் . தற்போது இந்த படத்தின் முதல் பார்வை வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

Share.