தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா சமீபத்தில் பா.ரஞ்சித் இயக்கத்தில் “சார்பட்டா” எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் வடசென்னையில் 80 களில் வாழ்ந்த குத்துச்சண்டை வீரர்கள் பற்றிய கதையை மையமாக கொண்டது என்று கூறப்படுகிறது.
இந்த படத்தில் ஆர்யாவுடன் கலையரசனும் குத்துச்சண்டை வீரர்களாக நடித்துள்ளார் என்றும், ‘போதை ஏறி புத்தி மாறி ‘ படத்தில் நடித்த தசரா விஜயன் இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டார்கள்.
நீலம் புரோடக்சன்ஸ் தயாரிப்பில் தற்போது சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் ஆர்யாவின் பிறந்தநாளன்று இந்த படத்தின் இயக்குனர் பா ரஞ்சித் இந்த படத்தின் மற்றொரு போஸ்டரை வெளியிட்டு ஆர்யாவின் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார். தற்போது இணையதளத்தில் இந்த போஸ்டர் வைரலாக பரவி வருகிறது.
Happy birthday #kabila @arya_offl
pic.twitter.com/iOUMiLyEhW
— pa.ranjith (@beemji) December 11, 2020