நடிகர் விக்ரமை வைத்து இயக்குனர் பா.ரஞ்சித் படம் இயக்கி வருகிறார் . கே.ஜி.எஃப் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது . தங்கலான் என்று இந்த படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர் .
இந்நிலையில் பா.ரஞ்சித் சமூக பிரச்சனைக்கு குரல் கொடுக்கக்கூடிய மனிதர் அந்த வகையில் தற்போது !புதுக்கோட்டை மாவட்டத்தில் தண்ணீர் தொட்டியில் மலத்தை கலந்த பிரச்சனை குறித்து ட்வீட் செய்துள்ளார் . அந்த பதிவில் ” தொடரூம் சமூக அநீதி!புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்ச்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு விசாரணை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடூம் கண்டனங்கள்!!
வன்கொடுமைகள் எதிர்க்கொண்ட மக்களை சந்திக்க துணிவில்லாத ஆதிதிராவிட நலத்துறை அமைச்சருக்கும், பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத கழகங்களின் தனி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் வன்மையான கண்டனங்கள்! என்று தெரிவித்துள்ளார் .
பா.ரஞ்சித் இந்த சமூக அக்கறையும் அவரது துணிச்சலான இந்த பதிவும் பாராட்டுக்கு உரியது .
வன்கொடுமைகள் எதிர்க்கொண்ட மக்களை சந்திக்க துணிவில்லாத ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கும், பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத கழகங்களின் தனத்தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் வன்மையான கண்டனங்கள்!
— pa.ranjith (@beemji) January 13, 2023