விஜய் இடத்தை பிடித்த நடிகர் விக்ரம் !

  • May 16, 2022 / 10:16 PM IST

இயக்குனர் ப.ரஞ்சித் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் சார்பட்டா பரம்பரை .இந்த படத்தில் ஆர்யா , பசுபதி , ஜான் விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தனர் . சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . திரை அரங்கில் வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் படம் அமேசான் ஓடிடி தலத்தில் வெளியானது . படம் நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது .

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரமை வைத்து ஒரு படம் ரஞ்சித் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.
நடிகர் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மகான். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார் . பாபி சிம்ஹா , சிம்ரன் , துருவ் விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர் . இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் செய்தி வெளியாகி இருக்கிறது . மேலும் இந்த படம் விளையாட்டை மையமாக வைத்து எடுக்க உள்ளதாகவும் அந்த படத்திற்கு மைதானம் என்ற தலைப்பை வைக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது .
இந்நிலையில் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் குறித்து ஒரு பேட்டியில் பா.ரஞ்சித் கூறுகையில், விஜய்க்காக ஒரு மேஜிக்கல் ஸ்கிரிப்டை எழுதி வந்தேன். அந்த ஸ்கிரிப்டை பேர்ட்மேன் பட பாணியில் இயக்க திட்டமிட்டிருந்தேன். அப்படி விஜய்க்காக உருவாக்கிய அந்த கதையை தான் இப்போது விக்ரமை வைத்து இயக்கப் போகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து முடித்து விட்டார்,கோப்ரா படத்திலும் நடித்து முடித்து விட்டார் எனவே வருகின்ற ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus