இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

2012-ஆம் ஆண்டு ‘அட்டகத்தி’ என்ற சின்ன பட்ஜெட் படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர் பா.இரஞ்சித். அந்த படத்தின் வெற்றியால் இயக்குநர் பா.இரஞ்சித்திற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து கார்த்தியுடன் ‘மெட்ராஸ்’, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் ‘கபாலி, காலா’ என கூட்டணி அமைத்து சூப்பரான படங்களை கொடுத்தார்.

கடந்த ஆண்டு (2021) பா.இரஞ்சித் இயக்கிய ‘சார்பட்டா பரம்பரை’ OTT-யில் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து பா.இரஞ்சித் இயக்கத்தில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ மற்றும் நடிகர் விக்ரமின் படம் என இரண்டு படங்கள் உருவாகி வந்தது.

இதில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படம் நேற்று (ஆகஸ்ட் 31-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தில் கலையரசன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், ஹரி கிருஷ்ணன், வினோத், சுபத்ரா ராபர்ட், ஷபீர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டென்மா இசையமைத்துள்ள இதற்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், செல்வா.ஆர்.கே படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Share.