விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டார். மேலும், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் செய்யப்பட்டார்.
தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் புதிய டாஸ்க் பற்றி ரியோ ராஜ் “டாஸ்கின் பெயர் ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’. ஒவ்வொரு பண்டிகைக்கும் பிள்ளைகள் வருவாங்கன்னு காத்துக்கிட்டு இருந்தவங்களுக்கு எப்பவுமே ஏமாற்றம் தான் கிடைச்சது.
சொத்தை பிரிச்சுறேன்டா, சொத்து வேணும்னா எல்லாரும் என்ன வந்து பாருங்கடா அப்படின்னு சொல்லிடுறாங்க. பாட்டி வந்து சொத்து இருக்குற பெட்டியை பூட்டி வச்சிட்டு, வந்திருக்க நீங்கள்ல யாரு என்ன நல்லா பாத்துக்குறீங்களோ அவங்களுக்கு நான் எல்லா பத்தரத்தையும் கொடுத்துடுறேன்னு பாட்டி சொல்லிருச்சு. யாரோ ஒருத்தர் மட்டும் என்ன பண்றாங்கனா, பெட்டியை திருடுறதுக்கு ப்ளான் பண்றாங்க. இதான் ஸ்டோரி” என்று சொல்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
#Day37 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/pTFUN3tc8t
— Vijay Television (@vijaytelevision) November 10, 2020