ஒரு ஹீரோ – ஹீரோயின், அதற்கென ஒரு கதைக்களம் என தொடர்ந்து படங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், பல கதைகளை ஒரே படத்தில் ஒவ்வொன்றாக குறும்படம் போல் சொல்லப்படும் படங்களும் உண்டு. அது ஆந்தாலஜி படம் என்று சொல்வார்கள். இந்த ஆந்தாலஜி படங்களில் வரும் கதைகள் ஒரே ஜானரை மையமாக வைத்து உருவாகலாம், அல்லது ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் வேறு ஜானரிலும் கதைகள் இருக்கலாம்.
இதுவரை தமிழில் ‘சிரிக்காதே, சோலோ, 6 அத்தியாயம், சில்லுக் கருப்பட்டி, புத்தம் புதுக் காலை’ போன்ற சில ஆந்தாலஜி படங்கள் வெளியாகி உள்ளது. தற்போது, தமிழில் உருவாகியுள்ள புதிய ஆந்தாலஜி படம் ‘பாவக் கதைகள்’. இதில் நான்கு குறும்படங்கள் இருக்கிறதாம். பிரபல இயக்குநர்களான கெளதம் மேனன், சுதா கொங்கரா, வெற்றிமாறன், விக்னேஷ் சிவன் ஒவ்வொரு குறும்படத்தையும் இயக்கியுள்ளனர்.
இதில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கியுள்ள குறும்படத்தில் அவரே முக்கிய ரோலில் நடிக்க உடன் சிம்ரனும், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள குறும்படத்தில் ஷாந்தனு – காளிதாஸ் ஜெயராம் – பவானிஸ்ரீயும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ள குறும்படத்தில் பிரகாஷ் ராஜ் – சாய் பல்லவியும், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள குறும்படத்தில் அஞ்சலி – கல்கி கோச்லினும் நடித்துள்ளார்கள். சமீபத்தில், இதன் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த டீசர் மற்றும் ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. இன்று சுதா கொங்கராவின் ‘தங்கம்’ கதையின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் வருகிற டிசம்பர் 18-ஆம் தேதி ‘நெட்ஃப்ளிக்ஸ்’-யில் ரிலீஸாகுமாம்.
What would you give up to see your loved ones happy? #PaavaKadhaigal@menongautham @SimranbaggaOffc @AadhityaBaaskar #SudhaKongara @BhavaniSre @kalidas700 @imKBRshanthnu @VetriMaaran @Sai_Pallavi92 @prakashraaj @VigneshShivn @yoursanjali @kalkikanmani @anirudhofficial pic.twitter.com/UXFRspGgmD
— Netflix India (@NetflixIndia) December 14, 2020