ஆந்தாலஜி படமான ‘பாவக் கதைகள்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • December 18, 2020 / 07:45 PM IST

ஒரு ஹீரோ – ஹீரோயின், அதற்கென ஒரு கதைக்களம் என தொடர்ந்து படங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், பல கதைகளை ஒரே படத்தில் ஒவ்வொன்றாக குறும்படம் போல் சொல்லப்படும் படங்களும் உண்டு. அது ஆந்தாலஜி படம் என்று சொல்வார்கள். இந்த ஆந்தாலஜி படங்களில் வரும் கதைகள் ஒரே ஜானரை மையமாக வைத்து உருவாகலாம், அல்லது ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் வேறு ஜானரிலும் கதைகள் இருக்கலாம்.

இதுவரை தமிழில் ‘சிரிக்காதே, சோலோ, 6 அத்தியாயம், சில்லுக் கருப்பட்டி, புத்தம் புதுக் காலை’ போன்ற சில ஆந்தாலஜி படங்கள் வெளியாகி உள்ளது. தற்போது, தமிழில் உருவாகியுள்ள புதிய ஆந்தாலஜி படமான ‘பாவக் கதைகள்’ இன்று (டிசம்பர் 18-ஆம் தேதி) ‘நெட்ஃப்ளிக்ஸ்’-யில் ரிலீஸாகியுள்ளது. இதில் நான்கு குறும்படங்கள் இருக்கிறதாம். பிரபல இயக்குநர்களான கெளதம் மேனன், சுதா கொங்கரா, வெற்றிமாறன், விக்னேஷ் சிவன் ஒவ்வொரு குறும்படத்தையும் இயக்கியுள்ளனர்.

இதில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கியுள்ள குறும்படத்தில் அவரே முக்கிய ரோலில் நடிக்க உடன் சிம்ரனும், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள குறும்படத்தில் ஷாந்தனு – காளிதாஸ் ஜெயராம் – பவானிஸ்ரீயும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ள குறும்படத்தில் பிரகாஷ் ராஜ் – சாய் பல்லவியும், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள குறும்படத்தில் அஞ்சலி – கல்கி கோச்லினும் நடித்துள்ளார்கள். இப்போது இந்த படத்தை ‘நெட்ஃப்ளிக்ஸ்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus