கையில் துப்பாக்கியுடன் பிந்து மாதவி… ‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்தின் அசத்தலான செகண்ட் லுக்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் எம்.சசிகுமார். இப்போது சசிகுமார் நடிப்பில் ‘கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், நாநா, பரமகுரு, எம்ஜிஆர் மகன், முந்தானை முடிச்சு’ மற்றும் வெற்றிமாறன் தயாரிக்கும் படம் என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், சசிகுமார் தனது கால்ஷீட் டைரியில் இணைய மற்றுமொரு புதிய படத்துக்கு ஓகே சொன்னார்.

‘பகைவனுக்கு அருள்வாய்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை ‘திருமணம் எனும் நிக்காஹ்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் அனீஸ் இயக்கி வருகிறார். இதில் ஹீரோயினாக வாணி போஜன் நடிக்கிறார். மேலும், முக்கிய ரோல்களில் பிந்து மாதவி, நாசர், ஜெயப்பிரகாஷ், சதீஷ் நினசம் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ஜிப்ரான் இசையமைக்கும் இதற்கு கார்த்திக்.கே.தில்லை ஒளிப்பதிவு செய்கிறார், மு.காசி விஸ்வநாதன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். கடந்த ஆண்டு (2020) டிசம்பர் 14-ஆம் தேதி முதல் இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது, இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை ஆர்யா, தேவி ஸ்ரீ பிரசாத், வரலக்ஷ்மி சரத்குமார். ஐஸ்வர்யா ராஜேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளனர்.

Share.