“2, 3 வாரங்களில் சம்பவங்கள் தொடங்கும்”… ‘சூர்யா 40’யின் சூப்பரான அப்டேட் கொடுத்த பாண்டிராஜ்!

  • January 2, 2021 / 06:32 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து, தயாரித்த புதிய படமான ‘சூரரைப் போற்று’ சமீபத்தில் OTT-யில் ரிலீஸானது. ‘ஏர் டெக்கான்’ விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் சூர்யா ‘நெடுமாறன் ராஜாங்கம்’ என்ற கேரக்டரில் வலம் வந்துள்ளார். அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளாராம்.

இந்த படத்தை ‘அமேசான் ப்ரைம்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள். ‘சூரரைப் போற்று’ படத்துக்கு பிறகு சூர்யா, கெளதம் மேனன் இயக்கத்தில் ‘நவரசா’ வெப் சீரிஸில் நடித்து கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ மற்றும் ‘சூர்யா 40’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் சூர்யா 40-வது படத்தை படத்தை பாப்புலர் இயக்குநர் பாண்டிராஜ் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்க உள்ளது.

இப்படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடந்து வருகிறதாம். தற்போது, இப்படம் தொடர்பாக இயக்குநர் பாண்டிராஜ் ட்விட்டரில் “அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். 2021 நமக்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமையும். உங்கள் எதிர்பார்ப்பும், ஆவலும் புரிகிறது! #சூர்யா40 ஷூட்டிங் பிப்ரவரியில் தான். இன்னும் முக்கியமான 2 கேரக்டர் Final ஆனதும் 2, 3 வாரங்களில் சம்பவங்கள் தொடங்கும்.. காத்திருப்போமே” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus