‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் மூலம் ஃபேமஸானவர்கள் தான் கோபி – சுதாகர். இவர்கள் டிரெண்டுக்கு ஏற்றாற்போல் தொடர்ந்து காமெடி வீடியோக்களை செய்து ரசிகர்களை எண்டர்டெயின் செய்து வருகிறார்கள்.
நமது வாழ்க்கையிலும் கோபி – சுதாகர் பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.
கோபி – சுதாகர் இருவரும் இணைந்து ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு’ மற்றும் ‘பிக் பாஸ்’ புகழ் யாஷிகா ஆனந்தின் ‘ஜாம்பி’ ஆகிய படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்கள். இவர்கள் கதையின் நாயகர்களாக நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தை அறிமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்குகிறார். கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் 9-ஆம் தேதி கோபி, யமுனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நேற்று கோபி – யமுனா தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.