இந்திய பார்டர் என்ன பார்டர் கடை பரோட்டோவா… பார்த்திபன் கிண்டல்…!

  • June 25, 2020 / 11:30 AM IST

இந்தியா-சீனா இடையே பார்டர் பிரச்னையில் பேச்சுவார்த்தை நடத்தச்சென்ற நம் ராணுவ வீரர்கள் மீது சீனா தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர், 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து பலரும் தங்களது குமுறல்களை இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள், இதில் சினிமா பிரபலங்கள் உள்ளடங்கும்.

சீன பிரதமர் இந்தியாவிற்கு வந்தபோது பிரதமர் மோடி அவருக்கு சிவப்பு சால்வை அணிவித்திருப்பார்,இதை கிண்டலடித்து பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பல திரைப்பட பிரபலங்கள் தங்களாகவே முன்வந்து சீன பொருட்களை புறக்கணிக்கிறோம் என்று தங்களது ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த சர்ச்சை பற்றி பார்த்திபன் ராதாகிருஷ்ணன் முதலில் தனது ட்விட்டர் பக்கத்தில் சீன பொருட்களை வாங்குவதை தவிர்த்து சீன பெருஞ்சுவரை உடைப்போம் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து கமெண்ட் செய்திருந்தார்கள்.

இதையடுத்து இன்று மீண்டும் பார்த்திபன் சீனாவைச் சாடி பதிவிட்டுள்ளார். இதில் சீன பிரதமர் மாமல்லபுரத்திற்கு வந்தபோது பிரதமர் மோடி, அவரது முகம் பதியப்பட்ட பட்டு சால்வையை பரிசளித்திருக்கிறார். இதனை நக்கலடித்து பார்த்திபன் ” புடவையை போனாலும் பார்டரை விட்டு கொடுக்கக்கூடாது. இதென்ன பார்டர் பரோட்டா வா? பங்கு போட்டு திங்க” என்று பதிவிட்டுள்ளார்.

பார்த்திபனின் இந்த மெசேஜை பார்த்த நெட்டிசன்கள் அவரைப் பாராட்டி, இந்த பதிவை ஷேர் செய்து வருகிறார்கள். அது தற்போது வைரலாகி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus